திருத்துறைப்பூண்டியில் சிலம்பம் மற்றும் கராத்தேவில் உலக சாதனை நிகழ்வு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 4 July 2024

திருத்துறைப்பூண்டியில் சிலம்பம் மற்றும் கராத்தேவில் உலக சாதனை நிகழ்வு.


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் முத்தூஸ் கராத்தே ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் செங்காந்தள் சிலம்பம் கலைக்கூடம் இணைந்து நடத்திய ஆரஞ்சு உலக சாதனை நிகழ்ச்சி மிக சிறப்பாக ஜூன் 30 ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.
 

முதலில் கராத்தே ஒரு மணி நேரம் பயிற்சி சாதனையும்,  இடைவிடாமல் இரண்டு மணி நேரத்திற்கு மேல் சிலம்பம் சுற்றி உலக சாதனை புரியும் நிகழ்ச்சியும்  நடைபெற்றது .இதில் 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு உலக சாதனை செய்தனர். இந்த சாதனை நிகழ்ச்சிக்கு ஆரஞ்சு உலக சாதனை நிறுவனர் மதன் குமார் தலைமை தாங்கினார், முத்தூஸ் கராத்தே ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் முத்துக்குமரன் வரவேற்புரையாற்றினார்.


இந்த சாதனை நிகழ்வில் திருத்துறைப்பூண்டி நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன், உன்னால் முடியும் தம்பி நிறுவனர் கோவிந்தராஜ், விக்டரி மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ராமலிங்கம், திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். திருத்துறைப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம், திருவாரூர் மாவட்ட ஜூடோ அசோசியேஷன் தலைவர் செல்வகணபதி, கராத்தே உலக சாதனை நிகழ்வை தொடங்கி வைத்தனர்.


கராத்தே உலக சாதனை நிகழ்வில் வெங்கடேஸ்வரா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி தாளாளர் பாஸ்கர், டால்பின் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியின் தாளாளர் ராஜகோபால் , மன்னார்குடி ஸ்ரீ பாரதி வித்யாலயா ளியின் தாளாளர் ராகவன் , காரிக்கோட்டை ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் பாண்டியராஜ், திருத்துறைப்பூண்டி என்.டி.சி நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியின் தாளாளர் முருகேசன் ,ஸ்ரீ சண்முக பர்னிச்சர் உரிமையாளர் கார்த்திகேயன், கேப்டன் கலை & கலாச்சார நடனப்பள்ளியின் நிறுவனர் தமிழரசன், வேலுடையார் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் ராஜகுரு  ஆகியோர் கராத்தே உலக சாதனை நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்கள். 


அதே போன்று சிலம்ப உலக சாதனை நிகழ்வானது  திருவாரூர் மாவட்ட சிலம்பம் அசோசியேசன் தலைவர் வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. ஜான் டி பிரிட்டோ உயர்நிலைப்பள்ளி தாளாளர் அமிர்தராஜ் ,  திருத்துறைப்பூண்டி டவுன் அரிமா சங்க தலைவர் முருகானந்தம், பவானி எலக்ட்ரிக்கல் உரிமையாளர்  ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் வின்சென்ட் ஆரோக்கியராஜ் ,ஏ ஆர் வி நிர்வாக இயக்குனர் விவேக் ராஜா, புனித தெரசாள்  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி ஆகியோர் சிலம்ப உலக சாதனை நிகழ்ச்சி தொடங்கி வைத்தனர், திருத்துறைப்பூண்டி அரிமா சங்கத்தை சேர்ந்த ஜோசப் ராஜ் ,வேதமணி சபரிநாதன் முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் பாலசுப்ரமணியன், ஜேசி ஐ தலைவர் செந்தில், டெல்டா ரோட்டரி சங்க விஜயராஜ், அருள், ஷாமினி போன்ற முத்து ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒருங்கிணைப்பாளர்களும் சிலம்ப உலக சாதனை நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.


இவ்விழாவிற்கு அகாடமி பயிற்சியாளர்கள் வெற்றி குமரன், அருள்,  அன்பு, ராஜசேகர், அந்தோணி, ஸ்ரீராம், பழனி, ஹரி வீர ராகுல் ஆகியோர்  ஏற்பாடு செய்திருந்தனர். இது பற்றி சமூக ஆர்வலரும், ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவரும், ஐக்கிய நாட்டு சபையின் தன்னார்வலர், முனைவர் துரை ராயப்பன் கருத்து தெரிவிக்கும் போது, "சாதனை என்பது முறியடிக்க முடியும் என்பதை நிருபிக்க இது மாதிரியான உலக சாதனை நிகழ்வு கட்டாயம் தேவை. மாணவர்கள் மன வலிமைகளை அதிகரிக்கும் செயலாகவே இது மாதிரி சாதனைகளை நான் பார்க்கிறேன்.


உலக சாதனை முயற்சி ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பகுதியில்  நடத்தப்பட்டால் இந்தியா போன்ற நாடுகள் விளையாட்டு தரத்தில் முதலிடம் வகிக்கும் என்பது எள்ளளவும் சந்தேகமில்லை என்று  கருதுகிறேன் என முனைவர் துரை ராயப்பன் பொது வெளியில் பத்திரிக்கையாளர்களிடம் கருத்து தெரிவித்தார். உலக சாதனை விழாவின் முடிவில் ஸ்போர்ட்ஸ் அகாடமி கராத்தே பயிற்சியாளர் கார்த்தி நன்றி கூற உலக சாதனை நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.


- திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad