திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கர்ணாவூர் ஊராட்சி வெள்ளங்குளி கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அந்தப் பகுதியில் அரசின் ஒரு ஏக்கர் புஞ்சை நிலம் உள்ளது. அந்த இடத்தில் வீடுகள் இல்லாதவர்களுக்கு அதில் வீட்டுமனை பட்டா வழங்கு கோரி மாவட்ட ஆட்சியர், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அப்பகுதியும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
திடீரென அந்த பகுதி மக்கள் 20 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அந்தப் பகுதியில் கொட்டகை அமைத்து உள்ளனர். இதற்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி மன்னார்குடி துணைவட்டாட்சியர் இந்த பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர். உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்று துணை வட்டாட்சியர் விரைவில் பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என அந்தப் பகுதி மக்களிடம் தெரிவித்ததன் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர் .
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment