திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் இல்லாத நிலையில ஆண்டுக்கு நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்படுகிறார்கள் விளைநிலங்களை தூர்த்து வீட்டுமனைகளாக மாற்றுவதற்காக ஏரி, குளங்களில் இருந்து வண்டல்மண் எடுக்க அனுமதியளிப்பதற்காக ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் இருந்து அந்தந்த பகுதி வட்டாட்சியர்கள் ரூ.2 லட்சம் வரை பேரம் பேசுவதாகவும், இதற்கு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ துணைபோவதாகவும் பி.ஆர். பாண்டியன் தலைமையிலான விவசாய அமைப்பு குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
மாதா மாதம் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கேளி கூத்தாக்கும் வகையில் செயல்படுவதாகவும், விவசாயிகளை மதித்து குறைகளை கேட்பதில்லை எனவும் குற்றம் சாட்டி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் திரளான விவசாயிகள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்திரண்டு முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது பேசிய பி.ஆர். பாண்டியன், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றது முதல் இம்மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்ட சமயங்களில் விவசாயம் பாதிக்கப்பட்ட விவரத்தையோ, விவசாயிகள் பாதிப்பு விவரத்தையோ பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை அனுப்புவது கிடையாது எனவும், தூர்வாரும் பணியில் ஏற்பட்டு உள்ள முறைகேடுகளை பார்வையிட்டு அதனை களைய எந்தவித முயற்சியும் மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பி.ஆர். பாண்டியன் திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீயின் மெத்தனபோக்கால் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. விளைநிலங்களை தூர்த்து வீட்டுமனைகளாக மாற்றுவதற்காக ஏரி, குளங்களில் இருந்து மண் எடுக்க அனுமதியளிப்பதற்காக ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் இருந்து அந்தந்த பகுதி வட்டாட்சியர்கள் ரூ.2 லட்சம் வரை பேரம் பேசுவதாகவும், இத்தகைய ஊழலுக்கு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ துணைபோவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் பேசிய பி.ஆர். பாண்டியன்,
குடவாசல் திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன் மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறை துணையோடு விவசாயிகள் விளைநிலங்களை அத்துமீறி அபகரித்து தனது வீட்டுக்கு சென்று வருவதற்கு ஏதுவாக பல கோடி ரூபாய் செலவில் சாலை அமைத்து வருகிறார். மாவட்ட ஆட்சியரின் பொறுப்பற்ற தன்மையால் ஒட்டுமொத்தமாக திருவாரூர் மாவட்டம் முடங்கிகிடப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் விவசாயிகளை புறக்கணிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருதயநோய் மருத்துவர்கள், சீறுநீரக நோய் மருத்துவர்கள், நரம்பியல் மருத்துவர்கள் என எந்தவித சிறப்பு மருத்துவர்களும் இல்லாத நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து இம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், விபத்தில் சிக்சி சிகிச்சைக்கு வருபவர்கள் என ஆண்டுக்கு பல நூறுபேர் கொலை செய்யப்படுகிறார்கள் என பகிங்கரமாக குற்றம்சாட்டினார்.
- திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment