விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகள் தங்களுடைய வயல்களில் உள்ள மண்ணை வளம் பெறசெய்வதற்காகவும் மண்பாண்ட தொழிலாளர்களின் நலன் கருதி மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பாண்டங்கள் செய்வதற்கு களிமண்ணை பெற்றுக் கொள்வதற்காகவும் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் குளங்களில் வண்டல் மண் மற்றும் களிமண்ணை எடுத்துக் கொள்ளலாம் இதற்கு ஆட்சியில் அனுமதி தேவை இல்லை வட்டாட்சியர் அனுமதி கொடுத்தாலே போதுமானது ஆகவே எளிமையான இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக துவக்கி வைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் பாலு உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment