மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி திருவாரூரில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 8 July 2024

மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி திருவாரூரில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.


அண்மையில் பருவம் தவறி பெய்த கனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் கோடை சாகுபடி செய்யப்பட்டிருந்த பருத்தி, எள் உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இது குறித்து விவசாயிகள் முறையான கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வலியுறுத்தினர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மழையினால் பாதிப்பு இல்லை என திருவாரூர் மாவட்ட வேளாண் துறை சார்பில் அறிக்கை தரப்பட்டுள்ளது. இதனை கண்டித்து இன்றைய தினம் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.


எனவே, உண்மையான நிலவரத்தை வெளியிட வலியுறுத்தியும், பருத்தி, எள் உள்ளிட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், காவிரியில் நீர் திறக்கப்படாத நிலையில் பொய்த்துப் போன குறுவை சாகுபடிக்கு விவசாயிகளுக்கு இழப்பீடாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 10,000 வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.


-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad