குறுவை சாகுபடி இழந்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாள் அட்டை உள்ள அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒன்றிய மோடி அரைசை கண்டித்து மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஒளிமதி ஊராட்சியில் நூறு நாள் அட்டை உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு நூறுநாள் வேலை வழங்கிட வேண்டியும் ஊதியம் ரூ 700 வழங்க வேண்டியும் 100 நாள் வேலை திட்டத்தினை ஆண்டுக்கு 200 நாட்களாக வேலை வழங்க வேண்டி ஊராட்சி மன்ற தலைவரிடம் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுத்து ஒன்றிய அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் ஒரு கோடி பேர் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் என அரசே கணக்கீட்டு நூறு நாள் அட்டை வழங்கியுள்ளதாகவும் நூறு வேரல திட்டத்திற்கு ஒன்றிய அரசு போதிய நிதியை ஒதுக்கவி்ல்லை எனில் விவசாய தொழிலாளர்கள் நீதிமன்றத்தை நாடுவோம் என ஓன்றிய அரசை எச்சரித்தனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment