திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தமிழ்நாடு பராமரிப்பு மேற்பார்வையாளர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இப்பணியில் உள்ள காலியாக இருக்கும் 55,000 மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் தொழிலாளர்களுக்கு ஊர் மாற்றம், உதவியாளர்கள் பணி மாற்றம் வேண்டும் எனவும் இதில் வேலை பளு ஒப்பந்தத்திற்கு எதிராக அறிவிக்கப்பட்ட ரீஎம்ப்ளாய்மெண்ட், டிஸ்கண்டினுடு உத்தரவுகளை உடனே திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
கோட்டத் தலைவர் சகாயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கோட்டச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் முருகையன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஹனிபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment