அஞ்சலகத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் கல்வி உதவித்தொகை பெறும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிக்கல். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 11 July 2024

அஞ்சலகத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் கல்வி உதவித்தொகை பெறும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிக்கல்.


நாகப்பட்டினம் கோட்டத்தில்' உள்ள அஞ்சலகங்களில் - மாணவர்களுக்கு புதிய சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறித்து நாகப்பட்டினம் கோட்ட கண்காணிப்பாளர் திரு.D.ஜோசப் ராஜ் கூறியிருப்பதாவது, புதிய சேமிப்பு கணக்கு  நாகப்பட்டினம் அஞ்சல் கோட்டத்திற்டு உட்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் 8 நாகப்பட்டினத்தில், உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் பள்ளி - மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவது சம்பந்தமாக தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அஞ்சல்துறையின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளியிலேயே புதிய சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி மாணவர்கள் தங்களுக்கான அஞ்சல் சேமிப்பு கணக்கு (அல்லது) இந்தியா போஸ்ட் பேமேண்ட் வங்கி கணக்கினை தொடங்கு கொள்ளலாம்.  இந்த கணக்கு தொடங்க குறைந்தபட்ச வைப்பு தொகை எதும் இல்லை. ஆதார் பதிவு. தேவையான உரிய ஆவணங்கள் .  சேமிப்பு கணக்கு தொடங்க 10 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு தங்களின் ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆதார் அட்டை, பான் கார்டு உடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், 10 வயத்திற்கு மேல் உள்ள மாணவர்களுக்கு தங்களின் ஆதார் அட்டை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் ஆகிய ஆவணங்கள் தேவைப்படும்  மேலும் மாணவர்களுக்கான ஆதார் பதிவு மற்றும் புதிப்பித்தல் சேவைகளுக்கான திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் தலைமை அஞ்சலங்களில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 8 மணிமுதல் இரவு 8 மணி வரை ஆதார் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. 


மற்ற அஞ்சலகங்களில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை ஆதார் தேவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலங்கள தொடர்பு சொள்ளவும். ஆனால் மன்னார்குடி அஞ்சலகத்தில் 50 டோக்கன்கள் வழங்குபடுவதால் அஞ்சலகத்துறையில் வங்கி கணக்கு தொடங்குவதற்காக ஏராளமான  அரசு பள்ளி மாணவர்கள்  அஞ்சலகத்துறை முன்பு காத்து கிடப்பதுடன் டோக்கன் அன்றையதினத்திற்கு முடிவடைந்துவிடுவதால் 


மறுநாளும் மாணவர்கள் அஞ்சலகத்திற்கு வருவதால் பள்ளிகள் மாணவர்களின் வருகை பாதிக்கபடுகிறது. இதுமட்டுமல்லாமல் அஞ்சலகதுறை சார்பாக அரசு பள்ளிகளுக்கே சென்று அஞ்சலக கணக்கை துவங்க மத்திய அரசு வலியுறுத்தியும் பெரும்பாலான பள்ளிகளுக்கு செல்லாமல் அஞ்சலகத்துறையினர் அலட்சியம் காட்டுகின்றனர் இதனால் மாணவர்களின் வருகை பதிவு மட்டுமல்லாமல் கல்வியும் பாதிக்கிறது என பெற்றோர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது .


-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad