இந்த நிலையில் வீட்டின் கட்டுமான பணி முடிவடையும் தருவாயில் சோமசுந்தரத்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனை அடுத்து வெளிநாட்டில் உள்ள அவரது மகனிடம் கட்டுமான நிறுவனத்தினர் வீட்டை கட்டி முடிக்க திட்டமிடப்பட்ட தொகையை விட கூடுதல் தொகையை பெற்று வீட்டை கட்டியுள்ளனர்.
சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பி சோமசுந்தரம் கட்டுமான நிறுவனத்தினரிடம் ஏன் கூடுதல் தொகையை பெற்றுள்ளீர்கள் என கேட்டுள்ளார். மேலும் வீட்டின் கட்டுமான பணிகள் முழுமை அடையாமல் பல இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டும், சுவர்களில் பூச்சி பெயர்ந்தும் முறையாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளாமல் இருந்துள்ளது.
இதனையடுத்து மனமுடைந்த சோமசுந்தரம் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீராணையத்தில் கட்டுமான நிறுவனம் மீது புகார் அளித்தார். வழக்கை விசாரித்த திருவாரூர் மாவட்டம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து வீட்டின் தரத்தை பரிசோதித்து அறிக்கை பெற்றது.
அதன் அடிப்படையில் தரமற்ற முறையில் கட்டிடம் கட்டப்பட்டது உறுதியானதையடுத்து முறையற்ற வணிகத்தை மேற்கொண்டதற்காக SP சக்திவேல் கட்டுமான நிறுவனம் 30 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக வசூலித்த 24 லட்சத்தை திருப்பி கொடுக்கவும் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
மேலும் வழக்கு செலவு தொகையாக 25 ஆயிரம் ரூபாயை வழக்குத் தாக்கலான நாள் முதல் 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.
- திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment