தமிழகத்தில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வழக்கறிஞர்கள் மன்னைநகரில் இருந்து பேரணியாக சென்று இரயில் நிலையத்தில் மன்னார்குடியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயிலை மறித்து ஒன்றிய அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய அரசு இந்த மூன்று சட்டத்தின் திரும்பப் பெறாவிட்டால் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர், இதனையடுத்து இரயில் மறியலில் ஈடுபட்ட அனைத்து வழக்கறிஞர்களையும் மன்னார்குடி காவல்துறையினர் கைது செய்து தணியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இதில் வழக்கறிஞர் சங்க தலைவர் எம்.இளஞ்சேரன், ராதா செயலாளர், மூத்தவழக்கறிஞர் கே.கலைவாணன், ஜெ. நாகையன் மற்றும் வி.ஜே அர்ஜூனன், எஸ். சிங்காரவேலு, வை. பாலசுந்தரம், பஞ்சமூர்த்தி , உதயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment