மனிதனின் அன்றாட வாழ்ககையோடு இரண்டற கலந்து நிற்கும் சமையல் கலைஞர்களது நலனை பாதுகாத்திட தமிழக அரசு தனி நலவாரியம் அமைத்துதர முன்வரவேண்டும் என திருவாரூரில் சமையல் சங்க மாநில பொதுச்செயலாளர் வேண்டுகோள். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 9 July 2024

மனிதனின் அன்றாட வாழ்ககையோடு இரண்டற கலந்து நிற்கும் சமையல் கலைஞர்களது நலனை பாதுகாத்திட தமிழக அரசு தனி நலவாரியம் அமைத்துதர முன்வரவேண்டும் என திருவாரூரில் சமையல் சங்க மாநில பொதுச்செயலாளர் வேண்டுகோள்.


சமையல் என்பது தொழில் அல்ல அது ஒரு கலை என்பதை உணர்ந்து அத்தகைய கலைஞர்களது நலனை பாதுகாத்திட அரசு தனி நல வாரியம் அமைத்து தரவேண்டுமெ இச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மீராமைதீன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 


மாநில அளவிலான சமையல் சங்கத்தின் கூட்டம் டெல்டா சமையல் சங்கத்தின் சார்பில் திருவாரூரில் அதன் மாநில பொதுச்செயலாளர் மீராமைதீன், மணிகண்டன் ஆகியோரது தலைமையில் இன்று நடைபெற்றது.


இக்கூட்டத்தில் கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், காரைக்கால், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை முதலான மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண், பெண் சமையல் கலைஞர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். 

இக்கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் மீராமைதீன், ஒவ்வொரு மனிதனும் தனக்காகவும், தன்னை சார்ந்து உள்ளவர்களுக்காக உலகில் காணும் எண்ணற்ற தொழிலில் ஏதாவது ஒருதொழிலை தேர்வு செய்து பொருள் ஈட்டி அதன் மூலம் வாழ்ந்து வருகிறோம். 


ஆனால் அத்தகைய எண்ணற்ற தொழிலில் சமையல் செய்பவர்களை சமையல் கலைஞர்கள்  என அழைப்பதோடு அதனை கலையாக நாம் பார்க்கிறோம். இதற்கு காரணம் மனிதனின் விருப்பத்தை அறிந்தும், தட்பவெட்ப காலநிலையினை அறிந்தும், அவர்களது உணவு பழக்கவழக்கத்தை கண்டறிந்தும் அதற்கு ஏற்ப சமையல் கலைஞர்கள்  உணவு வகைகளை தயாரித்து வழங்குவதால் அதனை கலையாக நாம் பார்க்கிறோம். 


மனிதனின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற கலந்துநிர்பவர்கள் சமையல் கலைஞர் ஒருவரே என்றார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சமையல் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மீராமைதீன் எங்கள் தொழில் நெருப்போடு தொடர்புடையது. 


ஓவ்வொரு சமையல் கலைஞரும் உயிரை பணயம்வைத்து இரவு பகல் பாராமல் அற்பணிப்போடு பணியாற்றிவரும் எங்களுக்கு  தமிழக அரசு தனி நல வாரியம் அமைத்து எங்களது குடும்பத்தை பாதுகாத்திட முன்வரவேண்டும் என்றார்.


-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad