இம்முகாமில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்.டி.ஆர்.பி.ராஜா மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ மாட்ட ஊராட்சி தலைவர் கோ .பாலூ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் இம்முகாம்களில் மின்சார வாரியம், வருவாய்துறை, ஊரகவளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட தொழில்மையம், தொழிலாளர் நலத்துறை ஆகிய 15 துறைகளைச் சேர்ந்த 44 சேவைகளை பொதுமக்களுக்கு விரைவாக வழங்கிடும் பொருட்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இம்முகாம்களில் பெறப்படும் மனுக்களை 30 நாட்களுக்குள் முடிவு செய்து, பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இம்முகாம்களில் பெறப்படும் கோரிக்கைகளில், இ-சேவை வாயிலாக விண்ணப்பிக்கும் மனுக்களுக்கு, உடனடியாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இம்முகாமிலேயே இ-சேவை மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதனைத்தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் செயல்படுத்தப்பட்டுவரும் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு தலா ரூ. 5824 வீதம் ரூ .46ஆயிரத்து 592 மதிப்பில் மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரங்களை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்.டி.ஆர்.பி.ராஜா வழங்கினார் அதனை தொடர்ந்து நெடுவாக்கோட்டையில் அமைய உள்ள ஜவுளி பூங்கவிற்கான முதற்கட்டமாக ரூ 29 லட்சத்தில் பணிகளுக்கான திட்ட வரைவினை ஆய்வு செய்தர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment