மன்னார்குடியில் லாரி உரிமையாளர்களுக்கு தமிழக அரசு அரசு லாரி வாடகையை உயர்த்தி வழங்க கோரி 700க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 4 July 2024

மன்னார்குடியில் லாரி உரிமையாளர்களுக்கு தமிழக அரசு அரசு லாரி வாடகையை உயர்த்தி வழங்க கோரி 700க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் விவசாயிகளிடம் இருந்து உடனுக்கு உடன் நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் செய்யப்படுவது வழக்கம்.  அதன்படி நடப்பு கோடை குறுவை நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக மன்னார்குடி, நீடாமங்கலம், பெருகவாழ்தான், கூத்தாநல்லூர்  உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு திறக்கப்பட்டுள்ள நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் நெல்லை உடனுக்கு உடன் அறவைக்கு கொண்டு செல்ல ஏதுவாக அந்தந்த பகுதிகளில் உள்ள லாரிகளை வாடகைக்கு அமர்ந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் நெல் மூட்டைகளை அறவை ஆலைகளுக்கு இயக்கம் செய்து வந்தன.  இதற்காக அரசு கட்டுபடியான வாடகையினை  லாரி உரிமையாளர்களுக்கு வழங்கி வந்தன.


கடந்த மாதம் வரை இருந்துவந்த நிலையில் இத்தகைய நடைமுறையினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளித்து அந்நிறுவனம் மூலம் நெல் இயக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி அத்தகைய தனியார் நிறுவனம்  மன்னார்குடியில் உள்ள லாரி உரிமையாளர்களை அணுகி மிகமிக குறைவான வாடகையினை நிர்ணயம் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து நெல் மூட்டைகளை அறவை ஆலைக்கு இயக்கம் செய்ய கோரியது.  


இதனை கண்டித்து மன்னார்குடி பகுதி லாரி உரிமையாளர்கள் 700க்கும் மேற்பட்ட லாரிகளை இயக்கம் செய்யாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் லாரி உரிமையாளர்களின் இத்தகைய வேலைநிறுத்த போராட்டத்தால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் நெல் மூட்டைகள் தேக்கம் ஏற்படும் நிலை எழுந்துள்ளது.  


இதுதவிர நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து வாங்கிய நெல் மூட்டைகள் இயக்கம் செய்யாத நிலையால் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அவ்வப்போது பெய்துவரும் மழையிலும், வெய்யிலிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தின் எதிரொலியாக ஒவ்வொரு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும் ஆயிரகணக்கான நெல்மூட்டைகள் தேங்கி கிடப்பதால் விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்யமுடியாத சூழலலும் நிலவிவருகிறது. 


எனவே தமிழக அரசு கடந்த மாதம் வரை இருந்த நடைமுறைப்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நேரடியாக லாரிகளை வாடகைக்கு அமர்த்தி நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad