வலங்கைமான் அருகே கந்தூரி விழாவிற்கான ஜமாத் கூட்டம் நடைபெற்ற போது எழுந்த வாக்குவாதத்தால், சேர்களை தூக்கி அடித்து கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபபரப்பை ஏற்படுத்தி வருகிறது. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 4 July 2024

வலங்கைமான் அருகே கந்தூரி விழாவிற்கான ஜமாத் கூட்டம் நடைபெற்ற போது எழுந்த வாக்குவாதத்தால், சேர்களை தூக்கி அடித்து கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட ஆவூரில் பள்ளிவாசலில் கந்தூரி விழா நடத்துவது தொடர்பாக ஜமாத் கூட்டம் நடைபெற்றது. அப்போது  பள்ளிவாசல் நிர்வாகம் திருவிழா கடைகளில் பள்ளிவாசல் வளாகத்தில் கடைகளை வைக்ககூடாது பொதுவெளியில் கடைகளை வைத்துக்கொள்ளுங்கள் அது பள்ளிவாசலுக்கு வருபவர்களுக்கு பொதுமக்களுக்கும் இடையூராக இருக்காது என பள்ளிவாசல் நிர்வாகம் கூறியுள்ளது.

அப்போது கடை ஏலம் எடுத்து நடத்துபவா்களுக்கும் பள்ளிவாசல் நிா்வாகத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டதால் கைகலப்பாக மாறி அங்கிருந்த சேர்ர்களால் தாக்கி கொண்டனர் . இதனை அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் சமூக வலைதளங்களில் பரப்பி வந்துள்ளனர்.


இது தொடர்பாக வலங்கைமான் காவல் நிலையத்தில் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு,  காவல்துறையின் சொந்த ஜாமீனில் ஐந்து பேரையும் விடுவித்துள்ளனர். பின்னர் வலங்கைமான் தாசில்தார் முன்னிலையில் அவைரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் .


-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad