மத்திய அரசு கண்டித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் திருத்துறைப்பூண்டியில் பாரதிதாசன் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறகணித்து போராட்டம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 4 July 2024

மத்திய அரசு கண்டித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் திருத்துறைப்பூண்டியில் பாரதிதாசன் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறகணித்து போராட்டம்.


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பாக திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் அரசு கலைக் கல்லூரியில் இன்று வகுப்பு புறகணிப்பு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தற்போது இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை உயர்கல்வி மதிப்பெண்கள் அடிப்படையில் மாநில அரசுகளே முன்னெடுக்க வேண்டும். தேசிய தேர்வு முகமை ஒரு தனியார் ஆகும்.

இந்நிறுவனம் மீது தொடர்ந்து வரும் குற்றச்சாட்டுகளால் இது நியாயமற்ற அமைப்பு என்பதை எடுத்துக்காட்டுகிறது. எனவே இந்த அமைப்பை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி  


அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் தண்டலச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு மாணவர் பெருமன்றத்தின் அமைப்பின் மாவட்ட செயலாளர் ஜெபி. வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் ஜெ.பாரத செல்வன், மாவட்ட துணை செயலாளர் சே அருண் மாவட்ட குழு உறுப்பினர் ஞானவேல், பிரவீன் உள்ளிட மாணவ மாணவிகள் ஏராளமான கலந்துக் கொண்டனர்.


- திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad