அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் உள்ளிட்ட திட்டத்தின் மூலம் மாதம் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கி வருகிறது கல்வியை ஊக்குவிக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுவதாக மன்னார்குடியில் மாவட்ட ஆட்சியர் பெருமிதம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 26 June 2024

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் உள்ளிட்ட திட்டத்தின் மூலம் மாதம் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கி வருகிறது கல்வியை ஊக்குவிக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுவதாக மன்னார்குடியில் மாவட்ட ஆட்சியர் பெருமிதம்.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் ராதா நரசிம்மபுரம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சாரூஸ்ரீ , கலந்துகொண்டு  ஆதிதிராவிட நலத்துறை ,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாவட்ட  மாற்றுத்திறனாளி நலத்துறை, வருவாய் துறை,  வட்ட வழங்கல் துறை , வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 149 பயனாளிகளுக்கு ரூ  22 லட்சத்து 48 ஆயிரத்து  945  மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசுகையில் இங்கு வந்துள்ள அனைவரும் தங்களுடைய குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்களா இல்லையா என்பதை கவனமுடன் கண்காணிக்க வேண்டும். பள்ளியில் சரியான முறையில் கல்வி கற்கிறார்களா என்றும் மாணவர்கள் பற்றி ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெளிவாக மாதத்திற்கு ஒரு முறை பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.


பள்ளிக்கூடத்தில் தனது பிள்ளைகளின்  செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு  புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் உள்ளிட்ட திட்டத்தின் மூலம் மாதம் மாதம் ரூபாய்  ஆயிரம்  தமிழக அரசு ஊக்கு தொகையாக  வழங்கி வருகிறது கல்வியை ஊக்குவிக்க ஒரு அரசாக தமிழக அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது.


அந்த வாய்ப்புகளை நம்முடைய பிள்ளைகள் பெற்று வருங்கால தலைமுறைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் அரும்பாடுபட வேண்டும். மாணவர்கள் தவறான வழிகளுக்கு செல்லாதவாறு ஆசிரியர்களுக்கு எந்த அளவிற்கு பங்கு இருக்கிறதோ அதே போல வீட்டில் உள்ள பெற்றோர்களும் முழுமையாக பங்கு இருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்து தங்களுடைய குழந்தைகள் வழி மாறி செல்லக்கூடாது என்பதை பெற்றோர்கள் கவனமுடன் கையாள வேண்டும் என தெரிவித்தார். 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் ஜி.பாலு, வருவாய் கோட்டாட்சியர்  கீர்த்தனாமணி  ஆகியோர் கலந்து கொண்டனர்.


-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad