"நன்னிலம் அருகே மறைந்த தலைமை ஆசிரியரின் எண்ணத்தை நிறைவேற்றிய இஸ்லாமிய குடும்பத்திற்கு பொதுமக்கள் மகிழ்ச்சியும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்". - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 26 June 2024

"நன்னிலம் அருகே மறைந்த தலைமை ஆசிரியரின் எண்ணத்தை நிறைவேற்றிய இஸ்லாமிய குடும்பத்திற்கு பொதுமக்கள் மகிழ்ச்சியும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்".



திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மாப்பிள்ளைக்குப்பம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள் அமைப்பதற்கு புதியதாக கட்டிடம் கட்ட வேண்டும் என  தலைமை ஆசிரியர் மருதவாணன், நன்னிலம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தார். 

மேலும் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு தலைமையாசிரியர்  மருதவாணன், மாப்பிள்ளைக் குப்பம் பகுதியில் உள்ள பாவா முகமது சகாபுதீன் குடும்பத்தினரை s சந்தித்து  6 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பங்களிப்பு  தொகையாக பெற்று நன்னிலம் பேரூராட்சி உதவியுடன் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு முயற்சியை மேற்கொண்டார். 


இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக தலைமை ஆசிரியர் மருதவாணன்  திடீரென  காலமாகிவிட்டார். மறைந்த தலைமையாசிரியர் மருதவாணனின்  முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட  இரண்டு புதிய வகுப்பறைகள்  கட்டிடம்  கட்டி முடிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது. 


மறைந்த தலைமையாசிரியர் மருதவாணனின் வேண்டுகோளை ஏற்று புதிய கட்டிடம் கட்ட நிதி அளித்த முகமது சகாபுதீன் குடும்பத்தினர் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தனர்.  


முன்னதாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு முழு முயற்சி எடுத்து கட்டிட முடிவதற்குள்ளாகவே காலமான தலைமையாசிரியர் மருதவாணன் உருவப்படத்திற்கு மலர் தூவி நினைவஞ்சலி  செலுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளியின் சார்பாக மறைந்த மருதவாணன் குடும்பத்திற்கும்.  நிதி அளித்த முகமது சகாபுதீன் குடும்பத்தினருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.


இதில் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள்,நன்னிலம் பேரூராட்சி அதிகாரிகள், பேரூராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் பலரும் பள்ளி கட்டிடத்தை கட்டுவதற்கு முழு முயற்சி எடுத்து காலமான தலைமையாசிரியர் குடும்பத்திற்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.


-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad