கார்ப்பரேட் கம்பெனிகள் , ஆன்லைன் வர்த்தகங்கள் சாமானியர்களை சூறையாடாமல் பாதுகாப்பதற்கு பாரதபிரதமர் , முதலமைச்சர் அவர்களும் சிறப்பு பாதுகாப்புச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என திருவாரூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 26 June 2024

கார்ப்பரேட் கம்பெனிகள் , ஆன்லைன் வர்த்தகங்கள் சாமானியர்களை சூறையாடாமல் பாதுகாப்பதற்கு பாரதபிரதமர் , முதலமைச்சர் அவர்களும் சிறப்பு பாதுகாப்புச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என திருவாரூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி.


திருவாரூரில் திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழுக்கூட்டம் திருவாரூர் மாவட்டத்தலைவர் விகேகே. ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் எ.எம்.விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் சந்தித்தார் அப்பொழுது அவர் தெரிவித்த போது, நீண்டகாலமாக  முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தோம், 3300 சதுர அடி கட்டப்பட்ட வீடுகளுக்கு இலவசமாக மின்சாரம் , குடிநீர் வழங்குவதை சட்டமாக்கியுள்ளனர்.


அதேபோல் வணிக நிறுவனங்களுக்கு சட்டம் இல்லாமல் இருந்ததை மாற்றம்செய்து  இரண்டு தினங்களுக்கு முன்பாக  அறிவிப்பு செய்ததை தமிழ்நாடுவணிகர்கள் சங்கங்கள் பேரமைப்பு வரவேற்கிறது. குறுகிய கட்டிடத்தில் மின்சாரம் வழங்கவும் அரசு ஒத்துழைப்பு தந்துள்ளது அதற்கும் அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம், ஜிஎஸ்டி வரியில் 2017 இல் போடப்பட்ட வரிகளை எடுத்து பாக்கிகள் இருப்பதாகவும் , வரி கட்டவில்லை என பல லட்சம்,  பல கோடிகள் என  வரி, வட்டி என  போடுகின்றனர்,  இதனை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச்சென்று சட்டமன்றம் நிறைவுபெற்ற பிறகு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என வலியுறுத்துகிறது.


மத்தியநிதியமைச்சரை சந்தித்து கட்டாயமாக வணிகவரித்துறையில் பல்வேறு மாற்றங்கள் வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்த உள்ளோம். தொடர்ந்து இரும்புக்கு 5% வரி குறைத்துள்ளனர் அதற்கு வரவேற்பு தெரிவித்துக்கொள்கிறோம்.


பல்வேறு வரிகளுக்கு வரிவிலக்கு வேண்டும். வரிஎன்பது ஐந்து அடுக்கு வரியாக இல்லாமல் ஒருமுறை வரி ஆக்கிடவேண்டும் என வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். அதை  மத்திய அரசு ஒருமுனை வரி ஆக்கப்பட்டு  கார்ப்பரேட் கம்பெனிகள் , ஆன்லைன் வர்த்தகங்கள்  சாமானியர்களை  சூறையாடாமல் பாதுகாப்பதற்கு பாரதபிரதமர் , முதலமைச்சர் அவர்களும் சிறப்பு பாதுகாப்புசட்டம்  ஒன்றை நிறைவேற்றவேண்டும் என்பதை நாங்கள் கோரிக்கையாக வலியுறுத்த உள்ளோம்.


அதேபோல் மின்சாரகட்டணம்  மாதம் ஒருமுறை கணக்கெடுத்து பணம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை முதலமைச்சரிடம் வலியுறுத்த இருக்கிறோம், மத்திய நிதியமைச்சர் அவர்கள் வங்கிகளில் போடுகின்ற பணத்திற்கு கணக்கில்லாமல் பிடித்தம் செய்து கொண்டிருக்கிறார். பணம் பிடித்தம் செய்வதை வெளிப்படை தன்மையுடன் வெளியிடவேண்டும்.


ஆண்டு ஒன்றுக்கு டோல் கட்டணம் உயர்ந்து கொண்டுள்ளது. மத்திய அமைச்சர் நிதின்கட்கரே   சாலைகளின் போடப்பட்ட பணம் வசூலித்த பின்னர் டோல் அகற்றப்படும் என உறுதியளித்தார்கள். அதை மறந்து விலையேற்றம் வந்து கொண்டுள்ளது. அது தடை செய்யப்பட வேண்டும்.  காலாவதியான டோல்கள் அகற்றப்படவேண்டும் என நேரடியாக டெல்லியில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம் என தெரிவித்தார் .


இந்நிகச்சியில் திருவாரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் , மாவட்ட துணைகாவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் மற்றும்  தஞ்சை மண்டல தலைவர் செந்தில்நாதன் , மாநிலதுணை தலைவர் ஞானசேகரன் , மாநிலபொதுச் செயலாளர் கோவிந்தராஜு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன் , திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்க தலைவர் பாலமுருகன் , முன்னாள் தலைவர் விகேஎஸ் அருள் உட்பட திருவாரூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .


இப்பொதுக்குழு கூட்டத்தில்  வர்த்தகர்களின் மாணவ, மாணவிகள் பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுகள் , பாராட்டு கேடயம் வழங்கினர் 


-திருவாரூர்  மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad