மன்னார்குடியில் நாட்டுவெடி தயாரிக்கும் பகுதியில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 16 June 2024

மன்னார்குடியில் நாட்டுவெடி தயாரிக்கும் பகுதியில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்.


திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகரின் பல்வேறு பகுதிகளில்  நாட்டு வெடி தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மன்னார்குடியில் கர்த்நாதபுரம் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான  இடத்தில் நாட்டுவெடி தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் திடிரென ஏற்பட்ட வெடி விபத்தில் நாட்டுவெடி தயாரித்துவந்த மனோகர் அவர்கள் மகன் சதீஷ்குமார் ( 35) என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  


மேலும் அங்கிருந்த அருண் உள்ளிட்ட இருவர்  படுகாயம் அடைந்தனர்.  உடனடியாக அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய இருவரையும் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.  இதுகுறித்து மன்னார்குடி தாலுகா காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மன்னார்குடியில் நாட்டு வெடி தாயாரிப்பு பட்டறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மன்னார்குடி பகுதியில்  நாட்டுவெடி தயாரிக்கும் நபர்கள் குறித்து சம்மந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரங்கள்  உரிய விசாரணை நடத்தவில்லை எனவும் வெடி தயாரிக்கும் இடங்களில் உரிமையாளர்  உரிய அனுமதி பெற்றுள்ளார்களா என அருகில் உள்ள குடியிருப்புவாசிகள்   கேள்வி எழுப்பி வருகிறார்கள் 


-செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad