வலங்கைமான் பகுதிகளில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 19 June 2024

வலங்கைமான் பகுதிகளில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்.


வலங்கைமான் அருகே சந்திரசேகரபுரம், பூண்டி பகுதிகளில் 400 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் மருத்துவர் ஹமீது அலி மற்றும் உதவி இயக்குனர் மருத்துவர் ஈஸ்வரன் ஆலோசனைப்படி, சந்திரசேகரபுரம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட சந்திரசேகரபுரம் மற்றும் பூண்டி கிராமத்தில் தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் 5-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு,400 க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. 


முகாமினை திருவாரூர் கோட்ட உதவி இயக்குனர் மருத்துவர் ஈஸ்வரன் மற்றும் திருவாரூர் கால்நடை நோய் புலனாய்வு துறை உதவி இயக்குனர் மருத்துவர் சுப்பிரமணி ஆகியோர் துவக்கி வைத்து ஆலோசனை வழங்கினர்.கால்நடை உதவி மருத்துவர் சக்திவேல் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் செந்தில் ஆகியோர் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினர்.


இந்த தடுப்பூசி முகாம் கடந்த 10-தேதி துவங்கி 21 நாட்களுக்கு சந்திரசேகரபுரம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் நடைபெற உள்ளது. அனைத்து வயது மாடுகள்,4 மாதம் அதற்கு மேற்பட்ட கன்றுகுட்டிகள் மற்றும் சினை மாடுகளுக்கும் கோமாரி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். எனவே அனைத்து கால்நடை வளர்ப்போரும் தவறாமல் தத்தம் கிராமங்களில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களில் தாங்கள் கால்நடைகளுக்கு அழைத்து வந்து கோமாரி தடுப்பூசி போட்டுக் கொள்ள சந்திரசேகரபுரம் கால்நடை உதவி மருத்துவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


-செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad