வலங்கைமான் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அரசு பொதுத்தேர்வுவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி ஊக்குவிப்பு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 19 June 2024

வலங்கைமான் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அரசு பொதுத்தேர்வுவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி ஊக்குவிப்பு.


திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், கோவிந்தக்குடி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏழை எளிய கிராமப்புற மாணவ மாணவியர்கள் 500க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். 


இத்தகைய அரசுப்பள்ளி மாநில அளவில் கல்வியில் சிறந்த இடத்தை பெறவேண்டும் என்ற நோக்கத்தில் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து சங்கத்தினை இன்று இப்பள்ளியில் தொடங்கினர்.


மேலும் இச்சங்கத்தின் தொடக்க விழாவில் கோவிந்தக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்து முடிந்த 10, 11 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்கள் மேலும் கல்வியில் சிறந்துவிளங்கும் வகையில் ஊக்கத்தொகையினை முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.


 மேலும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் பள்ளியில் 100 சதவீதம் தேர்த்தியை பெற்றுதந்து மாவட்டத்திற்கும், கிராமத்திற்கும் பெருமை தேடிதந்து அயராது பாடுபட்ட ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பொன்னாடை அணிவித்து  கௌரவிக்கப்பட்டனர்.  


முன்னால் முதல்வர்கள் அரசு பள்ளிக்கு கொண்டுவந்த  திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  அவர்களின் பிளக்ஸ் பேனர் வைக்கபபட்டுள்ளது. தொடர்ந்து மழைவளம் சிறக்கும் வகையிலும், சுற்றுப்புற சுழலை பாதுகாக்கும் நோக்கிலும் நிகழ்ச்சியின்போது அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில்  முன்னாள் மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


-செய்தியாளர் தருண்சுரேஷ்.

No comments:

Post a Comment

Post Top Ad