கடந்த சில தினங்களாக திருவாரூரில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று மாலை முதல் மேக கூட்டங்கள் ஒன்று கூடி இருள் சூழ்ந்து காணப்பட்டது. இந்த நிலையில் இரவு 7 மணிக்கு மேல் சாறல் மழை பெய்ய துவங்கியது. பின்னர் பலத்த காற்றுடன் கூடிய கனமழையாக மாறியது.
தொடர்ந்து 2 மணி நேரமாக திருவாரூர் நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கண்கொடுத்தவணிதம், கமலாபுரம், கொரடாச்சேரி, என்கண், முகுந்தனூர், ஆலங்குடி, வலங்கைமான், நீடாமங்கலம், ஓடாச்சேரி, வைப்பூர், சேந்தமங்கலம் உட்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்றுடன், இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்று வீசி வருவதால் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment