திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள தென்பரை அமைந்துள்ள தொன்மை மிக்க ஆலயம் ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீ ஆவணியப்பன் ஆலயம். இத்தகைய ஆலயத்தில ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இத்தகைய சித்திரை திருவிழாவில் ,வடக்கு தென்பரை , உட்காடு தென்பரை , கட்டபுளி தென்பரை, மேலக்காடு தென்பரை உள்ளிட்ட 5 கிராமத்தை சோ்ந்த கிராம மக்களின் குதிரை எடுப்பு விழா என்பது மிகவும் பிரசித்தி பெற்றது.
இவ்விழாவையொட்டி ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீ ஆவணியப்பன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு திரவியம், மஞ்சள், பால், தயிர், சந்தனம் முதலிய வாசனை திரவிய நறுமண பொருட்களை கொண்டு மகா அபிஷேகமும், தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.
குறிப்பாக இந்நாளில் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக கலந்து கொள்ளும் பக்தர்கள் கடும் விரதம் இருந்து குதிரை மதலைகளை சுமந்து வந்தால் நினைத்த காரியம் கைகூடி நற்பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.
அதன்படி மனிதனுக்கு உலகிலேயே தீர்க்க முடியாத ஒரு பிரச்சனை உண்டு என்றால் அது முன்னோர்களது சாபம். அத்தகைய முன்னோர்களது சாபத்தில் இருந்து விமோசனம் அளிக்க வேண்டும், திருமணத்தடை நீங்கவும், குழந்தைகள் கல்வி மேம்படவும், தொழில் அபிவிருத்தி அடையவும் குதிரை மதலைகளை சுமந்து ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீ ஆவணியப்பன் பக்தர்கள் மனமுருக வழிபட்டனர்.
இவ்விழாவில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குதிரை மதலைகளை ஊர்வலமாக சுமந்து ஆலயத்தை வலம் வந்து தங்களது நினைத்த காரியம் கைகூட வேண்டி இறைவனை மனமுருக வழிபட்டனர்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment