அப்பள்ளியின் தாளாளர் டாக்டர் ஜே.பி.அஷ்ரப் அலி தலைமை வகித்தார். அறங்காவலர்கள் ஏ.ஏ. அப்துல் ரசாக், பி.ஏ.சீனி முஹம்மது, கே.எ. ஹாஜா நஜ்முதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் ஏ. தியாகராஜன் வரவேற்றார். 10 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பரிசுகள் வழங்கி பாராட்டு பேசுகையில்,பொதுத் தேர்வை கண்டு மாணவர்கள் அச்சப்படக் கூடாது.
மதிப்பெண்கள் குறைந்து விட்டதே என நினைத்து கவலைப்படாதீர்கள் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். கல்வியிலும் வாழ்க்கையிலும் ஒழுக்கம் தேவை. கல்லூரியில் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். போதைப் பழக்கத்துக்கு அடிமையாகக் கூடாது. கல்விச் செல்வன் தான் அழியாத செல்வம். விடாமுயற்சி மட்டுமே தான் வெற்றியை தரும் என்றார். இவ்விழாவில் காவல் துறை ஆய்வாளர் வெர்ஜீனியா, மனோலயம் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு பள்ளி நிறுவனர் மற்றும் இளைஞர் நீதிமன்ற நீதி குழும உறுப்பினருமான ப.முருகையன்,உதவி ஆய்வாளர் நாகராஜ் திருவள்ளுவர் பொதுநல சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனம் மற்றும்நிர்வாக இயக்குனர் சோ. தெஷ்ணமூர்த்தி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இவ்விழா ஏற்பாடுகளை முதல்வர் தியாகராஜன் ஆசிரியர் வஹாப், ஆலோசகர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கவனித்தனர்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment