திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் இளைஞர்கள் பாதுகாப்பு பணியில் அரசு மருத்துவமனையில் ஈடுபட்டிருந்த காவலரை வீண் வம்பு இழுத்த காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்தவர்கள் ஹரிராஜன் மற்றும் அரவிந்தன் ஆகிய இருவரும் மது போதையில் இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார்கள்.
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லை என தகராறு செய்துவிட்டு காயத்துக்கு உரிய டிஞ்சரை எடுத்து போட்டுவிட்டு அதன்பின் தலைக்கேறிய மதுபோதையின் காரணமாக அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரிடம் தகாத வார்த்தைகளில் பேசி அவரை வீண் வம்பு இழுத்து அவரிடம் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தார்கள்
இந்த காட்சியை அந்த மருத்துவமனைக்கு வந்த நபர் தன்னுடைய அலைபேசியில் எடுத்து அதனை இணையத்தில் பரப்பி உளளார் அந்த காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. காவலரை தகாத வார்த்தைகளில் பேசி வீண் வம்பு இழுத்த அரவிந்தன் மற்றும் ஹரிராஜன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்.
No comments:
Post a Comment