திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே தேவன்குடி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோதண்ட ராமசுவாமி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 1942 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு கோவில் சிதிலமடைந்து பராமரிப்பு இன்றி இருந்தது ஊர்மக்கள் அனைவரும் ஒன்று கூடி சிதிலமடைந்த கோவிலை புதிப்பித்து 82 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது .
மூன்று தினங்களாக விக்னேஸ்வர பூஜை , லட்சுமி ஹோமம் , நவகிரக பூஜை உடன் யாகசாலைபூஜைகள் தொடங்கி நடைபெற்றது. இன்று காலை மூன்றாம் காலயாகசாலை பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு பூர்ணாஹீதி க்கு பின்னர் கடம் புறப்பாடுநடத்தப்பட்டது.
பின்னர் கோவிலின் விமான கலசத்தில் தீட்சிதர்கள் புனித நீர் ஊற்றிகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோபுர கலசத்திற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மூலஸ்தான சன்னதியில் ஸ்ரீ சீதாதேவி, லெட்சுமனர் சமேதரராக காட்சியளித்த ஸ்ரீ கோதண்ட ராமசுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் கும்பாபிஷேகத்தையும், அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment