வெங்கடேஷ் பிரசாத் டாடா ஏசி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் குடித்து விட்டு குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார். பலமுறை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வந்து வீட்டில் உள்ளவர்களிடம் கலாட்டா செய்துள்ளார். இதை தம்பி விக்னேஷ் தட்டி கேட்டுள்ளார். அவரையும் அடித்துள்ளார்.
இதை பார்த்துக் கொண்டிருந்த தந்தை கஜேந்திரன், இளைய மகன் விக்னேஷ்சுடன் சேர்ந்து, வெங்கடேஷ் பிரசாத்தை அடித்து, கழுத்தில் கயிறால் இறுக்கி கொலை செய்தனர். மேலும், உடலை அருகில் உள்ள வயலில் கொண்டு போய் வீசியுள்ளனர். விடியற்காலை வடகோவனூர் கிராம நிர்வாக அலுவலர் பிரியாவுக்கு தகவல் தெரிந்து, கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் காவல் துறை ஆய்வாளர் வெர்ஜினியா மற்றும் போலீசார் விரைந்து சென்று வெங்கடேஷ் பிரசாத் உடலை கைப்பற்றி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து கஜேந்திரன் விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தகவல் தெரிந்த திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். ஜெயகுமார் வடகோவனூர் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டார். மேலும் இது குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள் விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment