திருவாரூரில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு கோடை வெயில் தாகம் தணிக்கும் விதமாக நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் திறந்து வைத்தார். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 25 April 2024

திருவாரூரில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு கோடை வெயில் தாகம் தணிக்கும் விதமாக நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் திறந்து வைத்தார்.


தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அதிமுக தலைமை கழக அறிவிப்பின்படி, வெயில் வாட்டி வதைத்து வரும் வேளையில் பொதுமக்கள் தாகத்தை தணிக்கும் விதமாக நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் பனகல் சாலையில் அமைந்துள்ள நகர கழக அலுவலகத்தில் நீர் மோர் பந்தல் பொதுமக்களுக்காக இன்றைய தினம் திறக்கப்பட்டது. 


மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இரா. காமராஜ் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், பானகம், இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட குளிர்ச்சி தரும் பொருட்களை வழங்கினார். 


இந்நிகழ்ச்சியில் அதிமுக நகர கழக செயலாளர் ஆர்.டி.மூர்த்தி, மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை செயலாளர் கலியபெருமாள், ஒன்றிய செயலாளர் பி கே யு .மணிகண்டன் , செந்தில் வேல் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சின்னராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad