இன்சூரன்ஸ் கிளைம் ஆன பிறகும் அடமானமாக வைக்கப்பட்ட வீட்டின் பத்திரத்தை தராத ஈக்விடாஸ் தனியார் நிதி நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் - திருவாரூர் மாவட்டம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 7 March 2024

இன்சூரன்ஸ் கிளைம் ஆன பிறகும் அடமானமாக வைக்கப்பட்ட வீட்டின் பத்திரத்தை தராத ஈக்விடாஸ் தனியார் நிதி நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் - திருவாரூர் மாவட்டம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காரக்கோட்டை பகுதியை சேர்ந்த ஜோதி என்பவரது கணவர் நல்லதம்பி மன்னார்குடி பெரிய கம்மாளதெருவில் உள்ள  எக்விடாஸ் தனியார் நிதி நிறுவனத்தில் தனது வீட்டை அடமானமாக வைத்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றார்.


மேலும் இந்த வீட்டுக் கடனில், ஆயுள் காப்பீடு, பொது காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு உள்ளிட்டவை இணைத்து அதற்கான தொகையை கட்டி உள்ளார். மேலும் ஒவ்வொரு மாதமும் 7050 ரூபாய் மாத தவணையாக கட்டி வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் இரவு 10 மணிக்கு மேல் நிதி நிறுவன பணியாளர்கள் நல்லதம்பி வீட்டுக்குச் சென்று கடன் பாக்கியை கேட்டதாகவும் அதற்கு நல்ல தம்பி ஒவ்வொரு மாதமும் EMI பத்தாம் தேதி தான் கட்ட வேண்டும்.


ஏன் ஏழாம் தேதியை கேட்கிறீர்கள்.? என கேட்டபோது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு நல்லதம்பியை நிதி நிறுவன பணியாளர்கள் கீழே தள்ளிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதய நோயாளியான நல்லதம்பி மூன்று மாத சிகிச்சைக்குப் பிறகு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். கடன் பெற்ற நபர் இறந்த பிறகும் தொடர்ந்து மூன்று மாத காலத்திற்கு மாத தவணைத் தொகை 7050 ரூபாயை  மூன்று மாத காலத்திற்கு மொத்தம் 21, 105 ரூபாய் நிதி நிறுவன  பணியாளர்கள் வசூலித்து உள்ளனர்.

பின்னர் இன்சூரன்ஸ் கிளைம் ஆகிவிட்டதால் கடன் தொகையை செலுத்த தேவையில்லை என்று தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கூறிய நிலையில் அடமானமாக வைக்கப்பட்ட வீட்டின் பத்திரம் மற்றும் தடையில்லா சான்றுகளை தர மறுத்து கூடுதலாக 105162 ரூபாய் கட்டினால் தான் தர முடியும் என நிதி நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 


இது தொடர்பாக ஜோதி கந்த ஜனவரி 3ஆம் தேதி திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணைய தலைவர் சேகர் மற்றும் உறுப்பினர் லட்சுமண் ஆகியோர் இன்று நடைபெற்ற இறுதி விசாரணையில்.


எக்விடாஸ் தனியார் நிதி நிறுவனம் உடனடியாக மனுதாரரின் வீட்டு பத்திரம் மற்றும் தடையில்லா சான்று உள்ளிட்ட ஆவணங்களை வழங்க வேண்டும். மேலும் சட்ட விரோதமான முறையில் வசூல் செய்த 21 ஆயிரத்து 150 ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும். 


பாதிக்கபட்ட இவர்களின் மன உளைச்சலுக்காக 5 லட்சம் ரூபாயும், வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டார். ஆக மொத்தம் 5,31,150 ரூபாயை வழக்கு தாக்கல் செய்த நாளான ஜனவரி 3ஆம் தேதியிலிருந்து 9%  வட்டியுடன் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைவு ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad