ஊத்துக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் நூறாண்டு நிறைவு விழாவில் (NMMS) தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 7 March 2024

ஊத்துக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் நூறாண்டு நிறைவு விழாவில் (NMMS) தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு.


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல்வரின் பிறந்தநாள் முன்னிட்டு முப்பெரும் விழா நடைபெற்றது. 

ஊத்துக்காடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆரம்பித்து  நூறு ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு நூறாண்டு விழா மற்றும் பள்ளிக்கு புதிதாக 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும்.


தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்  தேர்வில் (NMMS) 98 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற பள்ளி மாணவி லத்திகா ஸ்ரீ அவர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி சதீஷ் தலைமையில் நடைபெற்றது. 


இதில் ஊத்துக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களை ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி சதீஷ் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி  திறந்து வைத்தார்.


 தொடர்ந்து பள்ளியின் நூறாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் முன்னாள், இந்நாள் ஆசிரியர்களின் நினைவலைகள், சொற்பொழிவுகள் நடைபெற்றன. 


பின்னர் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தேர்வில்(NMMS) வலங்கைமான் ஒன்றிய அளவில் 98 மதிப்பெண்களை பெற்று வெற்றி பெற்ற ஒரே மாணவியான லத்திகா ஸ்ரீக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.


 தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற இந்த தேர்வில்  பல்வேறு ஒன்றியங்களில் மாணவர்கள் தேர்ச்சி பெறாத நிலையில் ஊத்துக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி லத்திகா ஸ்ரீ 98 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தது பள்ளிக்கு மட்டுமல்லாமல் வலங்கைமான் ஒன்றியத்துக்கு பெருமை சேர்த்த மாணவிக்கு அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கைத்தட்டி கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர். 


இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி சதீஷ், வட்டார கல்வி அலுவலர்கள் சுகந்தி மற்றும் அன்பழகன், தலைமை ஆசிரியர் இருதயராஜ் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்


-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad