குடவாசல் அருகே மருதவாஞ்சேரி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் போதும் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்த 11 பேர் ஆசிரியருக்கு பாராட்டு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 7 March 2024

குடவாசல் அருகே மருதவாஞ்சேரி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் போதும் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்த 11 பேர் ஆசிரியருக்கு பாராட்டு.


திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் மருதவாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் சாந்தி  பாஸ்கரன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கருணாநிதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாருமதி கண்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கஸ்தூரி சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன் அனைவரையும் வரவேற்றார். 

உதவி ஆசிரியை புவனேஸ்வரி ஆண்டு அறிக்கையை வாசித்தார். இவ்விழாவில் கலந்து கொண்ட வட்டார கல்வி அலுவலர் குமரேசன்  தலைமை ஆசிரியர் ராஜனை பாராட்டி பள்ளி முன்னேற்றத்திற்கு மிகச் சிறப்பாக செயல்படுவதை சுட்டிக்காட்டி, நூறு நபர்களை  புரவலர் திட்டத்தில் சேர்த்து  ரூபாய் ஒரு லட்சம் வங்கியில் டெபாசிட் செய்து புரவலர் திட்டத்தில் சேர்த்ததை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.


வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி இன்றைய தினம் பதினோரு மாணவர்களை ஒன்றாம் வகுப்பில் சேர்த்ததை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.  மேலும் ஆசிரியர்  பயிற்றுனர் வைரவேலன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், மாரிமுத்து, கண்ணன், முத்துக்குமார், தேன்மொழி, பெத்தையன், ஆலத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 


வள்ளி மேலாண்மை குழு சார்பில் விழா மேடை ஒன்று கட்டித்தர வேண்டுகோள் வைக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர்- பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் விரைவில் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தனர். இதில் மாணவ,மாணவியர்களுக்கு போட்டிகளுக்கான பரிசு பொருள்களும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சிகள் அமைப்பினை புவனேஸ்வரி, சங்கீத ராஜன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.


- செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad