திருவாரூரில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 11 March 2024

திருவாரூரில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.


திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போஷன் பக்வாடா ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்  விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இதனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் முனைவர் புவனேஸ்வரி  மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் , வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், பிறந்த குழந்தை முதல் 6 வயது குழந்தை வரை  ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமான உணவு தேர்வுகளை உறுதி செய்வதற்கான நமது உறுதிப்பாட்டை புதுப்பிக்கவும், ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கவும்  இந்த ஊட்டச்சத்து உணவுகளின் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.


இந்த விழிப்புணர்வு கண்காட்சியில் திணை வகைகள் காய்கறிகள் , பழங்கள் , ஊட்டச்சத்து அடங்கிய உணவுப்பொருட்கள்  உட்கொள்வதால்  பெருகிவரும் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளின் விழிப்புணர்வு பதாகை கூடங்கள் என காட்சிப்படுத்தப்பட்டன.


இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பாலூட்டும் தாய்மார்களுக்கு   ஊட்டச்சத்து அடங்கிய விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி ஆரோக்கியமான வாழ்வுக்கான வழிகளை பின்பற்ற கேட்டுக் கொண்டார். மேலும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் பராமரிப்புகள்  பற்றிய நிகழ்வுகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தனர்.


- செய்தியாளர் தருண்சுரேஷ். 

No comments:

Post a Comment

Post Top Ad