78 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே கலைவாணன் திறந்து வைத்தார். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 11 March 2024

78 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே கலைவாணன் திறந்து வைத்தார்.


திருவாரூர் மாவட்டம் வக்ராநல்லூர் ஊராட்சியில்  மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ்    26.75 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம், 17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டிடம் மற்றும்  வேளுக்குடி ஊராட்சி நீர்மங்கலம் கிராமத்தில்  சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி   6 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் ஆகியவற்றை பூண்டி கே கலைவாணன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

தொடர்ந்து, வக்ராநல்லூர்   ஊராட்சிக்கு உட்பட்ட பூதமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ்  5.65 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட குடிநீர் தொட்டி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் மாணவிகள் பயன்பாட்டிற்கு ரூ 10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கழிவறை மற்றும் பள்ளியின் அடிப் படை உட்கட்டமைப்பு தூய்மை புத்துயிர் அளித்தல் திட்டத்தின்  கீழ் 13 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட  நான்கு வகுப்பறை கட்டடிடங்களை  பூண்டி கே கலைவாணன் எம்எல்ஏ திறந்து  வைத்தார்.


நிகழ்ச்சியில்  மன்னார்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர்   ஐவி குமரேசன்  தலைமை செயற்குழு உறுப்பினர் அரிச்சந்திரபுரம் செல்வம் ஊராட்சி மன்ற தலைவர்கள்  வக்ராநல்லூர் இல்முன்னிஷா பேகம், வேளுக்குடி  நீலமணி பிரகாஷ்,   துணைத் தலைவர் முகமது மகதூம்   ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


-செய்தியாளர்  தருண்சுரேஷ். 

No comments:

Post a Comment

Post Top Ad