பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக. நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் கீழ் பின்தங்கிய நிலையில் உள்ள 21 மகளிர்களுக்கு சிறு தொழில் கல்வி உதவித்தொகை மருத்துவ உதவித்தொகையாக தலா 10000 வீதம் 2,10,000 மும். மீனவளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் விபத்து காப்புறுதி நிவாரணத் திட்டத்தின் கீழ் மரணமடைந்த மீனவரின் குடும்பத்திற்கு இழப்பீட்டு காப்புறுதி தொகை ஐந்து லட்சத்திற்கான நிவாரணத் தொகைக்கான காசோலையினை வாரிசுதாரருக்கும் தாட்கோ திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடனாக 133.45 லட்சம் மதிப்பிலான கடனுதவியினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தமிழ்மணி மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் பாலசந்தர் மீன்வளத்துறையின் உதவி இயக்குநர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment