பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மன்னை இராஜகோபாலசுவாமி அரசு கலைக்கல்லூரி 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து மஞ்சப்பை வழங்கி விழிப்பணர்வு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 1 March 2024

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மன்னை இராஜகோபாலசுவாமி அரசு கலைக்கல்லூரி 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து மஞ்சப்பை வழங்கி விழிப்பணர்வு.


பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க உலகெங்கும் பல்வேறு நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு ஏற்கனவே ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டன. 

இது தவிர வேறு பல திட்டங்களும் கொண்டு வரப்பட்டன. அதில் முக்கியமானது மீண்டும் மஞ்சப்பை. இத்திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து மஞ்சப்பை போன்ற துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்கிற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


இதனையொட்டி திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடியில் மன்னை இராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூரி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து கல்லூரியில் மாணவ, மாணவியர்களுக்கிடையே மஞ்சப்பை குறித்த விப்புணர்வு பேரணி தொடங்கியது. கல்லூரியில் தொடங்கிய இப்பேரணி முக்கிய வீதி வழியா சென்று பொதுமக்கள்  இனி கடைகளுக்கு செல்லும் போது துணிப்பைகளை எடுத்துச்சென்று பொருட்கள் வாங்கவேண்டும் , பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது  என விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பியவாறு  சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டனா்.


- செய்தியாளர் ஆர் தமிழரசன் 

No comments:

Post a Comment

Post Top Ad