திருவாரூர் அருகே புலிவலம் கிராமத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக ஒன்றிய செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான தேவா தலைமையில் கழகக் கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதனை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரம் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மக்கள் கார்த்தி என்பவரது உணவகத்தில் முதல்வர் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நாள் முழுவதும் இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சியையும் தேவா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச்செயலாளர் செந்தில், ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment