திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி விழல்காரத்தெருவில் உள்ள ஏழை மாரியம்மன் கோவிலில் தை மாத வெள்ளிக்கிழமை ஒட்டி திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. மூலவர் ஏழை மாரியம்மனுக்கு மலர்மாலைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு. உற்சவர் சுவாமியை திருவிளக்கு பூஜை நடைபெற்ற பந்தலில் எழுந்தருள செய்திருந்தனர்.
இக்கோவில் வளாகத்தில் பெரிய திருவிளக்கை அம்மனாக பாவித்து அலங்கரித்து வைத்திருந்தனர். அதற்கு முன்னதாக ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து விளக்கினை ஏற்றி வைத்து பூஜை செய்தனர். வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜையில் மலர்களையும் குங்குமத்தையும் கொண்டு பக்தர்கள் விளக்கியிருக்கு பூஜை செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து நிறைவாக தீபம் காட்டி திருவிளக்கு பூஜை நிறைவு செய்தனர். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment