இப்புத்தகத் திருவிழாவானது (02.02.2024) முதல் 11.02.2024 வரை கோலகலமாக நடைபெறுகிறது. தினந்தோறும் தலைசிறந்த அறிஞர்களின் சொற்பொழிவுகள் கலைநிகழ்ச்சிகள் பொழுது போக்கு அம்சங்களுடன் லட்சக்கணக்கான புத்தகங்களுடன் தலைசிறந்த புத்தக நிறுவனங்கள் இடம் பெற்று உள்ளது.
புத்தக திருவிழாவில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெரிவித்ததாவது பெரிய தலைவர்கள் புத்தகங்களை வாசிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். புத்தகங்களை வாசிப்பவர்களாக மட்டுமில்லாமல் நேசிப்பவர்களாகவும் கூட இருந்திருக்கிறார்கள்.
இன்றைய வாசிப்பாளர்கள் நாளைய தலைவர்கள் என்ற கூற்றுக்கிணங்க இன்றைய இளைய தலைமுறைகளை வாசிப்பாளராக மாற்ற, நாளைய தலைவராக மாற்ற. தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக திருவிழா நடத்த வேண்டுமென்று ஆணையிட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது முறையாக பிப்ரவரி இரண்டாம் தேதி முதல் பிப்ரவரி-11ம் தேதி வரை புத்தக திருவிழா நடைபெறவுள்ளது முன்பெல்லாம் புத்தக கண்காட்சி என்பது சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே நடைபெறும்.
புத்தகங்கள் வாங்க வெளியூர் செல்ல வேண்டிய நிலையை மாற்றி இப்பொழுது நமது மாவட்டத்திலேயே புத்தகங்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. வாசிக்கும் பழக்கத்தை மட்டும் உருவாக்கி கொண்டால் போதும். அதற்காகத்தான் இந்த புத்தக திருவிழா நடைபெறுகிறது. வாசிக்கும் பழக்கம் நம்மிடையே வந்துவிட்டால் அது நமது வாழ்க்கை முழுவதும் தோழானாகவே இருந்து கொண்டிருக்கும்.
இன்றைய உலகம் போட்டி நிறைந்த உலகமாக உள்ளது. இந்த போட்டி நிறைந்த உலகத்தில் நம்மை உயர்த்தி காட்டுவது நமது அறிவு மட்டும்தான் அந்த அறிவை வாசிப்பு திறானால் மட்டுமே மேம்படுத்த முடியும். பேசுவதற்கு முன்பு யோசிக்க வேண்டும் யோசிக்கவதற்கு முன்பு வாசிக்க வேண்டும்.
இங்கு வந்திருக்கின்ற பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு நிறைய புத்தகங்களை வாங்கி கொடுக்க வேண்டும் பெற்றோர்கள் நமது குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கி கொடுத்து வாசிக்கும் திறனை மேம்படுத்த வேண்டும் பேராறிஞர் அண்ணா அவர்கள் கூறுவதுபோல நூலகம் இல்லா வீடு முழுமை அடையாத. அதுபோல் புத்தகங்களை வாங்குவோம், வாசிப்போம் நமது வாழ்க்கையை முழுமையடைய செய்வோம் என கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சி. ப்ரியங்கா தெரிவித்தார்.
விழாவில. மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) லதா திருவாரூர் நகர்மன்ற துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர் நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ் செல்வன் கொரடாச்சேரி ஒன்றியக்குழு தலைவர் உமாபிரியா பாலசந்தர், பணி நியமன குழு உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் புத்தக வாசகர்கள் கலந்து கொண்டனர்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment