திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள பேருந்து நிலையத்தில் கூலி வேலைக்கு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்த போது கும்பகோணத்திலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்த அரசு விரைவு பேருந்து பேருந்து நிலையத்திற்குள் சென்றதும் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் அங்கு பேருந்துக்காக காத்திருந்த விளக்குடியை சேர்ந்த சீதாலட்சுமி, கீழக்களூர் நங்காளி பகுதியைச் சேர்ந்த ராணி, களப்பால் அன்புமலர் உட்பட நான்கு பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த நான்கு பெண்மணிகளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் மேல்சிசைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
பலத்த காயம் அடைந்த நான்கு பெண்களும் விவசாய கூலித் தொழிலாளர்கள் ஆவர், மன்னார்குடி பேருந்து நிலையத்திலிருந்து வந்து வெவ்வேறு ஊர்களுக்கு கூலி வேலை செல்வதற்காக பேருந்து ஏற காத்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து மன்னார்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய அரசு பேருந்து ஓட்டுனரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment