கொரடாச்சேரியில் பேரறிஞர் அண்ணா 55வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 3 February 2024

கொரடாச்சேரியில் பேரறிஞர் அண்ணா 55வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.


திருவாரூர் அருகே பேரறிஞர் அண்ணா 55வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி கடைவீதியில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 55வது நினைவு தினத்தை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட திமுகவினர் பேரணி சென்று பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பேரூர் கழக செயலாளர் கலை வேந்தன், ஒன்றிய செயலாளர்கள் பாலச்சந்தர், சேகர் என்கிற கலியபெருமாள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


-செய்தியாளர் தருண்சுரேஷ்.

No comments:

Post a Comment

Post Top Ad