திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி தனியார் திருமண கூடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு, கிளை செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாதர் சம்மேளன ஒன்றிய செயலாளர் தேவிகா தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் எஸ். எம்.செந்தில்குமார் முன்னிலை வைத்தார், மாவட்ட செயலாளர் செல்வராஜ் வழிகாட்டுதலின் கூட்டம் நடைப்பெற்றது.
நல்லூர், ஊத்துக்காடு, கோவிந்தகுடி ஆகிய பகுதிகளில் மெயின் ரோட்டில் இருக்கும் டாஸ்மார்க் கடையை அப்புறப்படுத்த வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ், இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பாக்யராஜ், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சின்ன ராஜா, தலைவர் கலியபெருமாள், விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய செயலாளர் ரவி, பொருளாளர் மருதையன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment