இந்த நிகழ்வில் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் நீதிபதி டி. சேகர், சாய்ராம் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர். சாய் பிரகாஷ் லியோ முத்து, முதன்மை தகவல் அலுவலர் கே. நரேஷ் ராஜ் மற்றும் ஏ.முத்து வைரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் லியோ முத்து கல்வி அறக்கட்டளை சார்பில் 10- ஆம் வகுப்பு மற்றும் 11, 12 -ஆம் வகுப்பில் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக பொறுப்பாளர் பி. கோபு செய்திருந்தார் தொடர்ந்து துணை முதல்வர் ஆர். இந்திரா நன்றி கூறினார் மேலும் இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் கலந்து பலரும் கலந்து கொண்டனர்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment