வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில், முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 55 -வது நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பொது விருந்தில், வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன், ஆலய செயல் அலுவலர் அ. ரமேஷ், தக்கார்/ ஆய்வர் மும்மூர்த்தி, திமுக நகர செயலாளர் பா. சிவனேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித்தமிழ்மாறன் மற்றும் திமுக நிர்வாகிகள் எஸ். ஆர். ராஜேஷ், புருஷோத்தமன், வி. சி. ராஜேந்திரன், கோ. சண்முகசுந்தரம் யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அறநிலையத்துறையின் சார்பில் 46பெண்களுக்கு விலையில்லாபுடவைகள் வழங்கப்பட்டன. பொது விருந்து ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் அ. ரமேஷ், தக்கார்/ஆய்வர் மும்மூர்த்தி, அலுவலக மேலாளர் தீ.சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
இதே போல வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் உள்ள ஆபத் சகாயேஸ்வரர், குரு பரிகார ஆலயத்தில் நடைபெற்ற பொது விருந்தில் வலங்கைமான் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ. தட்சிணாமூர்த்தி, ஆலங்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராசாத்தி மற்றும் திமுக நிர்வாகிகள் ரஞ்சித், மூர்த்தி, ராஜு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment