சட்டமன்ற பொருப்பாளர்கள் அன்வர்தின், கராரமேஷ், ரகீம், அண்ணாத்துரை இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் பாட்சா, மாவட்ட துணைத்தலைவர் நபீஸ், வட்டார தலைவர் வடுகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், முன்னதாக மாநில பொதுக்குழு உறுப்பினர் மெட்ரோ மாலிக் வரவேற்று பேசினார். இதில் மேலிட பார்வையாளர் நாகை பாராளுமன்ற ஒருங்கிணைப்பாளர் கணிவண்ணன் கலந்துக்கொண்டு பேசுகையில், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சிறப்பாக செயல்பட வேண்டும் அனைத்து பூத் கமிட்டிக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்து பணியாற்ற வேண்டும் கட்சி தலைமை எங்களுக்கு கொடுத்த பயிற்சியின் போலவே இங்குள்ள நிர்வாகிகள் பேசினார் இது மகிழ்ச்சியை தருகிறது என்றார். அப்போது முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும், திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரைவேலனுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சை அல்லது மயிலாடுதுறை தொகுதியை கட்சி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் பேச்சாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சுந்தரராமன், மாவட்ட விவசாய பபிரிவு செயலாளர் ராஜ்மோகன் மாணவர் காங்கிரஸ் மாநில செயலாளர் புவனேஷ், எஸ்.ஐ துறை மாநில செயலாளர் ஜேம்ஸ், நகர தலைவர்கள் அருள், சாம்பசிவம், எழிலரசன், வட்டார தலைவர்கள் தியாகராஜன், ராமலிங்கம், நிர்வாகிகள் மயிலாடுதுறை ராஜீவ், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சையது முபாரக், நிர்வாகிகள், சக்கில் அகமது இஜாஸ், கபீர், ரமேஷ், அப்துல் ரகுமான், பயாஸ் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment