வலங்கைமான் பகுதிகளில் கண்டா வர சொல்லுங்க என அதிமுகவை விமர்சித்து சுவரொட்டி ஒட்டிய இருவரை பிடித்து காவல்துறை விசாரணை. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 5 February 2024

வலங்கைமான் பகுதிகளில் கண்டா வர சொல்லுங்க என அதிமுகவை விமர்சித்து சுவரொட்டி ஒட்டிய இருவரை பிடித்து காவல்துறை விசாரணை.


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நீடாமங்கலம் ஆலங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு நேரத்தில் கண்டா வர சொல்லுங்க என அதிமுகவை விமர்சித்து கீர்த்தி, மோகன்ராஜ் ஆகிய இரண்டு நபர்கள் சுவரொட்டிகளை  வலங்கைமான் பகுதிகளில்ஒட்டி கொண்டிருந்தனர். 

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்கள் இருவரையும் வலங்கைமான் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகிறார்கள்.  ஏன் அவர்கள் இருவரையும் அழைத்து வந்து விசாரணை செய்கிறீர்கள் என திமுகவினர் பத்துக்கு மேற்பட்டோர் வலங்கைமான் காவல் நிலையத்தில் கூடியுள்ளனர் .


அதிமுகவினர் திமுக குறித்து தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் கண்டா வர சொல்லுங்க என நோட்டீஸ் ஒட்டி உள்ள நிலையில் திமுகவினரால் திருவாரூர் மாவட்டத்தில் ஒட்டி உள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad