திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் கோதண்டராமர் கோவிலில் மாசி மகம் தீர்த்தவாரி நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற வைணவ கோவிலான இக்கோவிலில் மாசி மக தீர்த்தவாரி வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. சீதாதேவி, லட்சுமணன், அனுமன் சாமிகள் சமேதராக வில்லேந்திய திருக்கோலத்தில் புறப்பட்ட கோதண்டராமர் பல்வேறு வீதிகளின் வழியாக வலம் வந்து கோவிலின் பின்புறம் உள்ள சரயூ புஷ்கரணி தெப்பகுளத்தில் எழுந்தருளினார்.
அங்கு தீர்த்த பேர் சுவாமிக்கு பால், மஞ்சள், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை கொண்டு தீட்சிதர்கள் அபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து சுவாமியை தலையில் சுமந்தபடி குளத்தில் தீர்த்தவாரி நடத்தினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- செய்தியாளர் ஆர்.தமிழரசன்
No comments:
Post a Comment