திருவாரூரில் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 24 February 2024

திருவாரூரில் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.


மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் அதிமுக நகர கழக செயலாளர் ஆர்.டி. மூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இரா.காமராஜ் பங்கேற்று அம்மாவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னதாக திருவாரூர் பேருந்து பணிமனையில் அண்ணா தொழிற்சங்கம் சார்பாக நடைபெற்ற விழாவில் அம்மாவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


நிகழ்வுகளில் அண்ணா தொழிற்சங்க நாகை மண்டல தலைவர் விஜயகுமார், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் பி.கே.யு. மணிகண்டன், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் ரயில் பாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad