திருவாரூர் நகராட்சியில் பாதாள சாக்கடை பராமரிப்பு திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுவதை கண்டித்தும் மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் முன்னறிவிப்பு இல்லாமல் கடைகளை ஏலம் விடுவதை கண்டித்தும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 22 February 2024

திருவாரூர் நகராட்சியில் பாதாள சாக்கடை பராமரிப்பு திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுவதை கண்டித்தும் மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் முன்னறிவிப்பு இல்லாமல் கடைகளை ஏலம் விடுவதை கண்டித்தும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


திருவாரூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்டத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் ஆர். கே.ஐயப்பன் தலைமையில் மாவட்ட இப்பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஒன்றிய தலைவர்களிடம் கட்சியின் வளர்ச்சி குறித்தும் பொறுப்பாளர்களிடம் நேரடியாக ஆலோசனைகளை பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் ஏ. கே. ஐயப்பன் ஆலோசனை செய்து சிறப்புரையாற்றினார். 

இந்நிகழ்ச்சியில் வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் குமார், மாவட்ட செயலாளர் சந்திரசேகர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களான காசிநாதன், பட்ஜெட் ராஜேந்திரன், மனோகரன், கோவிந்தராஜன், நரசிம்மன், மாவட்டத் துணைச் செயலாளர் மணிகண்டன், நகரத் தலைவர் நாகராஜன், நகர செயலாளர் ராஜேந்திரன், தீபக் ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 


இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி திருவாரூர் நகராட்சியில் பாதாள சாக்கடை பராமரிப்பு திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுவதை கண்டித்தும், புதிய பேருந்து நிலையத்தில் முன்னறிவிப்பு இல்லாமல் கடைகளை ஏலம் விடுவதை கண்டித்தும், விவசாயிகளுக்கு 100%  இழப்பீடு தர வேண்டும் எனவும், திருவாரூர் பழைய பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதிகளில் கடைகள்  இடிக்கப்பட்டு சிறு சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.


எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் சின்னையா அறிவிக்கும் கூட்டணிக்கு முழுமையாக உழைத்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஒரு மனதோடு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் இந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


- செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad