மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் முன்னிலையில் மாற்று கட்சியில் இருந்து 50 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 5 February 2024

மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் முன்னிலையில் மாற்று கட்சியில் இருந்து 50 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அண்ணா திமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் இரா காமராஜ் முன்னிலையில் திமுக மற்றும் அமுமுக அக்கட்சியில் இருந்து விலகி அண்ணா திமுகவில் உறுப்பினர்களாக இணைந்தனர்.

2024 பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்  திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும்   முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் மாண்புமிகு எடப்பாடி யார் தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சியில் அமர வேண்டும்  என   திமுக , அமமுக , ஓபிஎஸ் அணி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் நாளுக்கு அதிமுகவில் இணைந்து பணியாற்ற வருகின்றனர்.


இந்நிலையில்  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில்  மன்னாா்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்க்கண்ணன்  தலைமையில்  வடகோபனுர்  ஊராட்சியிலிருந்து     திமுக , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகிய  சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள்       அதைபோல்  திருவாரூர் தெற்கு ஒன்றிய செயலாளர்  பி.கே. யு. மணிகண்டன் தலைமையில்    அமமுக  திமுக  உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சுமார்  50க்கும் மேற்பட்டோர்  விலகி கழக அமைப்பு செயலாளரும் மாவட்ட கழக செயலாளருமான முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் முன்னிலையில் கழகத்தில் அடிப்படை உறுப்பினர்களாக இணைந்தனர்.


-செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad