திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு திருவாரூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டனம் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 6 February 2024

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு திருவாரூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டனம் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சி ஐ டி யு திருவாரூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டனம் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளாக பழைய மோட்டார் சட்டத்தை திருத்தி பாரதிய நியாய சங்கீதா என்ற புதிய திட்டத்தை உருவாக்கி ஓட்டுனரை கொலை குற்றவாளியாக மாற்றத்துடிக்கும் மத்திய மோடி அரசை கண்டித்தும், இந்த சட்டத்தை திரும்பபெற கோரியும், காலாவதியான டோல்கேட்களை உடனே மூட வேண்டும்.

ஆன்லைன் அபராதத்தை நிறுத்தவேண்டும், வாகனங்களுக்கான ஆயுள் வரியை திரும்பபெற வேண்டும், தொழிலாளர் நலச்சட்டத்தை திருத்தி மோட்டார் தொழிலை அழிவு பாதைக்கு தள்ளக்கூடாது, மோட்டார் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கமும் நடத்திவருகின்றனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட தலைவர் கேஜேஆர்.காதர் தலைமையில் சிஐடியு திருவாரூர் மாவட்டதலைவர் அனிபா, மாவட்ட பொருளாளர் மாலதி, துணைச் செயலாளர் வைத்தியநாதன் மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கர்ணன், இப்ராஹிம்சேட், ஏஒன்.மணி, ஜெய்சங்கர், வெங்கடேசன் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

No comments:

Post a Comment

Post Top Ad